ஃபோர்டு ஆலை ஊழியர்கள் போராட்டம்

224

அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்தது.

இதனையடுத்து குஜராத்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.

ஆனால் செங்கல்பட்டு மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு ஆலையை யார் கைப்பற்றப் போகிறார் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Advertisement

மறைமலைநகர் ஃபோர்டு ஆலையை மூடுவதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மே இறுதிக்குள் இழப்பீடு தொகை வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், பணிக்கு வரும் ஊழியர்களிடம் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று கையெழுத்து போட்டால், மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்று ஆலை நிர்வாகம் கூறியதை கண்டித்து, 10 நாட்களுக்கு மேலாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.