அமெரிக்காவில் வெள்ளம் – 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

182
flood
Advertisement

அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில், கடந்த வாரம் பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் சிக்கி, குழந்தைகள் உள்பட 20 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

Advertisement

மேலும் 50 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாகாணம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாகவும், தற்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு 3-வது கட்ட அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.