மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  296
  flood
  Advertisement

  பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள கலவகுண்டா அணையிலிருந்து 4 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

  இதனால், பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் பாலாற்றின் இருபுறமும் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, வேடிக்கை பார்க்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.