50KMக்கு ₹3,000 கட்டணம் கேட்டும் Uber அதிர்ச்சியில் மக்கள்

246
Advertisement

பொதுவாக மழை காலங்கள் ,இரவு நேரங்கள் போன்ற சமயங்களில் வாடகை வாகனங்கள் சற்று அதிக கட்டணம்  கேட்பார்கள். அதுவும்   ஏற்றுக்கொள்ளும்படி   இருக்கவேண்டும் என்பது  தான் அணைத்து பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

 ஆனால் இங்கோ,கட்டணம்  மூலம் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது ஒரு நிறுவனம்.மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஒரு நபர்  தனது வீட்டிற்கு  செல்ல டாக்ஸி முன்பதிவு செய்யும் போது, ​​Uber இல் இந்த சவாரிக்கான கட்டணம் 3,000 ரூ காட்டியதால் அதிர்ச்சிடைந்தார்.

இதனை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதை அடுத்து வைரலாகி வருகிறது.அவர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டில் , உபெர் செயலியில் சாதாரண வண்டியின் கட்டணம் ரூ. 3,041 ஆகவும், பிரீமியர் சவாரிக்கான கட்டணம் ரூ. 4,081 ஆகவும் இருந்தது. Uber XL சவாரி கட்டணம் 5,159 ரூபாயாக இருந்தது.

மேலும் மும்பையில் இருந்து கோவா விமான கட்டணம் இதை விட குறைவானதே என தன் அதிருப்தியை வெளிப்படியுள்ளார். இந்த  புகைப்படம்  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.