விமான உணவில் துண்டிக்கப்பட்டிருந்த பாம்பு தலை

39
Advertisement

துருக்கியைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர் தனது உணவில் துண்டடிக்கப்பட்டருந்த பாம்பு தலையை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் கடந்த வாரம் ஜெர்மனிக்கு செல்லும் ‘சன் எக்ஸ்பிரஸ் ” விமானத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

தகவலின் படி , விமான ஊழியர்களுக்கு வழங்கப்பட உணவில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையில் ஒரு சிறிய பாம்பின் தலை இருந்துக்குள்ளது.இதையடுத்து,உணவை சப்ளை செய்த கேட்டரிங் நிறுவனத்துடன்  ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து  செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

இது குறித்து தெரிவித்துள்ள விமான நிறுவனம், ” விமான ஊழியர்கள் ஆகட்டும், விமான பயணிகள் ஆகட்டும் அனைவருக்கும்  தரமான சேவையை வழங்குவது தான் தங்கள் முன் உரிமை என கூறியுள்ளது.

Advertisement

முன்னதாக மே மாதம், அகமதாபாத்தில், மெக்டொனால்டு விற்பனை நிலையத்தில், ஒரு வாடிக்கையாளர் தனது குளிர்பானத்தில் பல்லி மிதக்கும் வீடியோ வைரலானது.