ஆழ்கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்

37

மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஆழ்கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.

அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மொத்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்காரணமாக தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லலாம் என்பவதால், ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.