அலட்சியத்தால் ஏற்பட்ட தீ விபத்து

405
fire
Advertisement

கும்பகோணத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சேதமானது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை, முகுந்தநல்லூர், கோட்டை சிவன் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சேதமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisement

இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள், முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமானது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூங்கில் மரத்தை தீயிட்டுக் கொளுத்திய போது, அதிலிருந்து பரவிய தீயால் குடிசை வீடுகள் எரிந்துள்ளது தெரியவந்துள்ளது.