காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்

81
police
Advertisement

சென்னை கோட்டூபுரம் நாயுடு தெருவில் சாலை அமைப்பது தொடர்பாக, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்மநாபன் என்பவருக்கும், தாமஸ் என்பருக்கும் இடையே தகராறு உள்ளது.

இதுதொடர்பாக இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நேற்று தாமஸ் உள்ளிட்ட சாலை அமைக்கும் போது, வழக்கறிஞர்கள் பத்மநாபன், ரவி, பாலசந்தர் ஆகியோர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மேலும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர்புரம் போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

காவல் நிலையத்திற்கு வந்த இருதரப்பு வழக்கறிஞர்கள், அங்கும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து சைதாப்பேட்டை வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்லம்மாள் ஆகியோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.