நில அதிர்வில் குழந்தையை பாதுகாத்த தந்தை

57
Advertisement

நிலஅதிர்வை உணர்ந்து குழந்தையை வெளியே தூக்கிக்கொண்டு ஓடிவந்த தந்தையின் வீடியோ இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்ஸ்டாகிராமில்  பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு நபர் தன் குழந்தையுடன் வீட்டின் ஹாலில் உள்ள மேஜை மேல் குழந்தையை அமரவைத்து,அவரும் நாற்காலியில்  அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில், வீடு அதிர்வது  போல உணர்ந்த அந்த தந்தை, ஒரு நொடி தாமதிக்காமல் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்துவிடுகிறார்.சில வினாடிகள் கழித்து வீட்டின் உள்ளே இருந்த அவரின் மனைவியும் வெளியே ஓடிவந்து கணவரை அனைத்துக்கொள்கிறார்.

Advertisement

நிலநடுக்கத்தில் வீடு பயங்கரமாக  அதிர்வது வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.நொடிப்பொழுதில் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியேறி குழந்தையை பாதுகாத்த தந்தைக்கு பாராட்டு குவிந்துவருகிறது.