குழந்தையின்  மேல்  விழுந்த மின்விசிறி- அதிர்ச்சி வீடியோ !

57
Advertisement

வீடுகளில் ஏற்படும் சிறு விபத்துக்கள்  கூட சில நேரங்களில் உயிருக்கு  ஆபத்தாகிவிடும்.அதுவும் குழந்தைகள் உள்ள   வீடுகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது இணையத்தில் பல வீடியோக்கள்.

தற்போது வியட்நாமில் நடந்த மற்றொரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ஓர் குடும்ப உறுப்பினர்கள் மேலே பொருத்தப்பட்டுள்ள மின்விசிறிக்கு நேராக கீழே அமர்ந்து  உணவு சாப்பிடுகிறார்கள்.ஒரு கட்டத்தில் மின் விசிறி பொறுத்தப்பட்ருந்த பிடியிலிருந்து கழன்று கீழே விழுந்துவிடுகிறது.

மனதை பதறவைக்கும் இந்த வீடியோவில், மின் விசிறி கீழே அமர்ந்துள்ளவர்கள் மேல் விழுகிறது.அதிர்ஷ்டவசமாக மின்விசிறி ரேகைகள் மூன்றும், அமர்ந்திருக்கும் மூன்று பேரின் இடையில் இருப்பது போல விழுந்துள்ளது.

Advertisement

அந்த மூன்று  பேரில் ஒரு குழந்தையும் அடங்குவான். கண்ணிமைக்கும் நேரத்தில்  கீழே விழும் மின் விசிறி, குழந்தை மேல் விழுவதை  கண்டு அலறி அடித்துக்கொண்டு எழுந்து ஓடிப்போய்  குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்பட்டு உள்ளதா என பார்க்கிறார்  குழந்தையின் தாய். அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இல்லாமால் அனைவரும் தப்பினர்  .