ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

suicide
Advertisement

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள புதுமந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.

அவர் அதேபகுதியில் உள்ள தோட்டத்தில் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், சந்திரனின் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக யாரும் வெளியே வராத நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதிமக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, சந்திரனும் அவரது மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையிலும், மகனும், மகளும் தரையிலும் இறந்து கிடந்துள்ளனர்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சந்திரன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதிமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.