தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத்தலை பாம்பு

55
Advertisement

விலங்குகள் உலகம்  ஆச்சரியமும் ஸ்வாரஸ்யங்களும் அடங்கியவை.மிக அற்புதமான உயிரினங்களின் வீடியோக்கள் இணையத்தில் நம்மை ஈர்க்கும் விதம் இருக்கும்.

இந்நிலையில், மிக அரிதான இரண்டு தலை பாம்பு ஒன்று தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அந்நாட்டில் உள்ள விலங்குகள் மீட்பு குழு ஒன்று தன் முகநூலில் பகிர்ந்துள்ளது.

Advertisement

அதில், நபர் ஒருவர் தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தபோது , இரண்டு தலைகள் கொண்ட பாம்பு ஒன்றை கண்டதாக தகவல்  கொடுத்தார்.இதையடுத்து , அந்த நபரின் வீட்டிற்கு சென்று மீட்குழு தோட்டத்தில் தேடியுள்ளனர்.

சற்று நேரம் தேடியபோது,மிகவும் அரிதான  இரண்டு தலைகள் கொண்ட பாம்பு ஒன்று சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலைகளுடன் பிறக்கும் விலங்குகளுக்கு “பாலிசெபாலி” என்ற நிலை உள்ளது, இது பாலூட்டிகளை விட ஊர்வனவற்றில் மிகவும் பொதுவானதாக காணப்படுகிறது.