புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கரின் காளை மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது…

19
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், வடசேரிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சின்னக்கொம்பன் காளையை வாடிவாசலில் இருந்து  அவிழ்த்து விட்டபோது கட்டையில் மோதி மயக்கம் அடைந்து விழுந்தது. அந்த காளை உடனே மீட்கப்பட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.