இறக்குமதிக்கு தடை கூறி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தல்

143

ரஷ்யாவின் வைரங்களை இறக்குமதி செய்ய,தடை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் , ரஷ்யாவின் வைரங்களை இறக்குமதி செய்ய, தடை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

ரஷ்யாவின் வைரங்களை உலகின் மிக பெரிய வைர வர்த்தக மையமான, பெல்ஜியத்தின் ஆண்டிவெர்ப்பில் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என போலந்து, அயர்லாந்து, லிதுவேனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. ரஷ்ய வைரத்திற்கு தடை விதித்தால், வர்த்தக மையத்தின் 30 சதவிகித வணிகம் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது