சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த தாய்

222

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைய பணத்திற்காக விற்பனை செய்வதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில், சிறுமியின் தாய் சுமையா, சுமையாவின் இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் தரகர் மாலதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் போலிசார் நடத்திய விசாரணையில், சிறுமி பருவமடைந்தது முதல் 4 ஆண்டுகளாக, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிறுமியின் கருமுட்டைகளை தொடர்ந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், சிறுமிக்கு, 20 வயது என போலியான ஆதார் அட்டை தயாரித்து ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருமுட்டை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 20 முறை சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.