கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS

105

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி,, யு.கே.ஜி. வகுப்புகளில் ஏழை- எளியோரின் குழந்தைகள் கல்வி பயின்றனர் என்று அவர் கூறினார்.

Advertisement

இப்போது, அந்த வகுப்புகளை தமிழக அரசு ரத்து செய்ததற்கு  எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடிகர்கள் உள்பட பிரபலங்கள் யாரும் துணை போகக்கூடாது என்றும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.