2 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து

35

இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பத்தால் இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தகிக்கும் வெப்பத்தால் அந்நாட்டில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர் காக்கும் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும், இரண்டு நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.