இங்கிலாந்து – நியூசிலாந்து

223

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து அணியும் 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

இதனால் அந்த அணி, 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்த நிலையில், அதன் பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி, போல்ட், ஜோமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.