நாளையே கடைசி நாள்..

students
Advertisement

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவடையும் நிலையில்,
புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளிட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைகான தரவரிசைப் பட்டியலில் ஒரே மதிப்பெண்களை பெற்றிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளிட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கணிதம், இயற்பியல், Optional பாட மதிப்பெண்கள், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள், 10-ம் வகுப்பு மதிப்பெண்கள், பிறந்த தேதி, ரேண்டம் எண் ஆகியவற்றின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

மேலும் வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமா? இல்லையா என்பது குறித்து தெரியாததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

Advertisement