குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் காட்டு யானை

35

கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவையை அடுத்த பேரூர் தீத்திபாளையம் கிராமத்தில், தாமோதரன் என்பவருக்கு சொந்தமான நிலப்பகுதியில், 6 காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதம் செய்துள்ளது.

மேலும், அவரின் வீட்டு கதவை உடைத்து தின்பண்டங்களையும், பாத்திரங்களையும் சேதம் செய்து விட்டு, அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

Advertisement

இதில், ஒரு யானை மட்டும் வழித்தவறி வேளாங்கண்ணி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிவதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அந்த ஒற்றை யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.