மகுடம் சூடப்போவது யார்? 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கின

227
Advertisement

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் துவங்கியது . பிற்பகல் 1 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் தெரியவர வாய்ப்புள்ளதாகவும், மாலைக்குள் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில காவல்துறையினருடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.