மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்

144

தமிழகத்தில் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி பதவியிடங்களுக்களுக்கான தேர்தல், ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று, திமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும்  வேட்பாளர்களான கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், மற்றும் கிரி ராஜன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் அதிகாரி சீனிவாசனிடம் வேட்புமனுக்களை அளித்தனர்.