சென்னை தாம்பரத்தில் சிக்னலை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்…

27
Advertisement

சென்னை கோயம்பேடிலிருந்து  பழனி நோக்கி செல்லும் அரசு பேருந்து தாம்பரம் சுரங்கபாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, சிக்னலை கடந்து செல்வதற்காக  இருசக்கர வாகனங்களில் பலர் காத்திருந்தனர். இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர்கள் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர்கள் தூக்கி வீசப்பட்னர். இதை பார்த்த வாகன ஓட்டிகள் சாலை விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சாலை விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.