எழுத்துப் பிழையுடன் ‘எடப்பாடி’ ஆர்ப்பாட்டம் – வைரல் புகைப்படம்

eps
Advertisement

திமுக அரசை எதிர்த்து எழுத்துப்பிழையுடன் எதிக்கட்சித்தலைவர் ஏந்தியிருந்த பதாகை, சமூகத்தலங்களில் வைரலாகி வருகிறது.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற கோரி அ.தி.மு.க கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் நடைபெற்ற அக்கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சி  தலைவரும், அதிமுகவின் இணை  ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

அப்போது கூடியிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரவர் கையில் திமுக அரசுக்கு எதிராக பாதைகளை ஏந்திருந்தனர்.

Advertisement

அப்போது, அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பதாகை ஏந்தியபடியே கோஷமிட, கூடியிருந்தவர்களும் உடன் கோஷமிட்டனர்,

அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், அதனை சந்திக்க தயார் என்றும், தற்போது அரசு கடன் சுமையில் இருப்பதற்கு முந்தைய அதிமுக அரசு தான் காரணம் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும், எதிர்க்கட்சி தலைவரான நான் திமுக அரசின் குறைகளை குறுவதால் தான் இந்த அரசு சிறப்பாக ஆட்சி நடத்தும் என கோஷமிட்டனர்.

இதனிடையே, அவர் ஏந்தியிருந்த பதாகையில் “நீட் தேர்வை ரத்து செய்றேன்” என்ற  வாசகம் இடம் பெறுவதற்கு பதில்”., “நீட் தேர்வை ரத்து செய்ரேன் ” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த எழுத்து பிழையுடன் அவரின் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

இதனிடையே, ஒருமுன்னாள் முதலமைச்சரும், முக்கனிகளில் ஒன்றின் இடத்தை சேர்ந்தவரான எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ’பிழை’க்கூட தெரியவில்லையா? என சமூகவலைத்தளங்களில் இணைய வாசிகள் கருத்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியின்றி கூட்டம் கூடியதால் சேலம் சூரமங்கலம் காவல் துறையினர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.