எந்திரமயமாக இயங்கி வரும் வாழ்க்கைமுறையில் மன அழுத்தம், தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.
தலைமுடி உதிர்வை சரி செய்ய உதவும் நட்ஸ் வகைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிங்க், செம்பு, மக்னீசியம் மற்றும் செலீனியம் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும் பூசணி விதைகள் தலைமுடி மெலிந்து போவதை குறைக்க உதவுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் fatty acids உள்ள வால்நட்ஸ் புதிய முடி முளைப்பதை தூண்டி, தலைமுடியை அடர்த்தியாக்குகிறது. ஒமேகா 3 acids உள்ள ஆளி விதைகள் தலைச்சருமத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
Gamma-linolenic acid உள்ள சூரியகாந்தி விதைகள் தலைமுடியை பளபளப்பாக்கும் இயற்கையான conditioner போல செயல்படுகிறது. மக்னீசியம் மிகுதியாக உள்ள பாதாம் பொடுகுத் தொல்லைக்கு தீர்வாக அமைவதோடு தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
சிங்க் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைந்துள்ள சியா விதைகள், முடி மெலிவதை தவிர்த்து தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. முடிக்கு தேவையான கொழுப்பு சத்தை அளித்து தலைமுடி பராமரிப்பில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ள எள் விதைகள் வலுவிழந்த முடிக்கு ஊட்டம் அளிப்பதோடு இளநரையையும் தடுக்க உதவுகிறது.
பயோட்டின் எனும் உட்பொருள் உள்ள பிஸ்தா முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது. சாதாரணமாக கிடைக்க கூடிய வெந்தயத்தை அவ்வப்போது உட்கொள்வதால் தலைமுடி அடர்த்தியாக உதவும் என கூறும் உணவியல் நிபுணர்கள், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது, முறையான உடற்பயிற்சி மற்றும் சீரான தூக்கமும் சிறந்த தலைமுடி ஆரோக்கியத்துக்கு அவசியம் என கருத்து தெரிவிக்கின்றனர்.