அமைச்சர் துரைமுருகனை கண்கலங்க வைத்த முதலமைச்சர்

218
duraimurugan
Advertisement

சட்டப்பேரவையில் இன்று பொன்விழா காணும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் நயினார் நாகேந்திரன், உள்ளிட்ட அனைத்துக்கட்சித்தலைவர்கள் பாராட்டி பேசியபோது துரைமுருகன் கண்கலங்கினார்.

சட்டப்பேரவையில் MLA-வாக 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக பொறுப்பு வகித்துவரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர், பொன்விழா நாயகனாக திகழும் துரைமுருகன், ஆட்சிக்கும் கட்சிக்கும் வழிகாட்டியாக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.

Advertisement

கருணாநிதியின் இதயத்தில் சிம்மாசனம்போட்டு அமர்ந்து இருந்தவர் துரைமுருகன் என்றும் நூறாண்டுகால சட்டப்பேரவை வரலாற்றில் 50 ஆண்டுகளாக அவையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்தார்.

முதலமைச்சரின் பாராட்டுரையைக்கேட்டு துரைமுருகன் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.