போக்குவரத்து நெரிசலால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றன

115

டெல்லியில்,  கடும் போக்குவரத்து நெரிசலால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வானங்கள் அணிவகுத்து நின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் பயன்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள மேம்பாலம் ஒன்று  பராமரிப்பு காரணமாக  மூடப்பட்டுள்ளது.

இதனால், வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து  ஊர்ந்து சென்றன.