தேனி  கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக  சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்…

24
Advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.

இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.  இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகளை குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.