கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

72

கனமழை காரணமாக, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement