சபாநாயகருக்கு பெண் துபாஷ்.. தமிழக சட்டசபையில் ஒரு வரலாற்று நிகழ்வு

343
Advertisement

சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் பொறுப்பில் இருக்கும் நபர் சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்.

இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு இந்த பொறுப்பு தரப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வந்தாலும்கூட முதன்முறையாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அப்பணியில் ஒரு பெண் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.