கடலூரில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் மற்றும் உடை வழங்கிய DSP-ன் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

154
Advertisement

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே நகரை சேர்ந்தவர் பானுமதி.

இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டு மனையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பானுமதி தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்று

விருத்தாசலம் DSP-யிடம் புகாரளித்தார். DSP ஆரோக்கியராஜ், புகாரளித்தவர்களின் ஏழ்மை நிலையை அறிந்து, அவர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் உடை வழங்கி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் அவர்களை ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். DSP-யின் செயல் அப்பகுதிமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.