மதுபோதையில் ஆணை கடுமையாக தாக்கும் இளம்பெண்

32
Advertisement

உத்தரபிரதேச மாநிலம்  லக்னோவில் பப் ஒன்றின் வெளியில் ஆண் ஒருவரை ஒரு பெண் போதையில் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தகவலின்படி , ஜூலை 23 அன்று   லக்னோவில் உள்ள ஒரு பப்பின் வாசலில் வைத்து போதையில் இருந்த இரு பெண்களில் ஒருவர் ,அங்கிருந்த ஒரு ஆணை கடுமையாக தாக்குகிறார்.அந்த பெண்ணுடன் இருந்த மற்றொரு பெண் அவரை தடுக்க முயற்சிக்கிறார்.

ஆனால் அவரால் தடுக்க முடியவில்லை,போதையில் இருந்த அந்த பெண் அந்த நபரை அங்கிருந்த பூந்தொட்டியை எடுத்து தாக்குகிறார்.ஒருகட்டத்தில்  பப்பின் பவுன்சர்கள் வந்து அந்த பெண்ணை தடுத்து வெளியே அனுப்பினர்.

Advertisement

வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் , அந்த நபர் தாக்கிய பெண்ணை கைது செய்துள்ளனர்  லக்னோ காவல்துறை.