அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை இதுவரை விளக்கம் அளிக்காததால், அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர உள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்…

24
Advertisement

சென்னை அடுத்த பம்மல் பகுதியில் தி.மு.க செயல் வீரர்கள் பொது கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, நாடாளுமன்ற உறுப்பினர்  டி.ஆர்.பாலு, அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை, தனது நோட்டீசுக்கு இதுவரை உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே அண்ணாமலை மீது வரும் 8ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், கிரிமினல் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.