வரதட்சணை கொடுமை – வயது மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

273

நர்கெட்பல்லியில் உள்ள அவுரவாணி கிராமத்தைச் சேர்ந்த ரெயில்வே தொழிலாளி நரேஷ்.

இவருக்கும் லாஸ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு சாத்விக் என்ற குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது லாஸ்யாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக ரூ.35 லட்சம் தருவதாக உறுதியளித்தனர்.

முதலில் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர்.

மேடக் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட நரேஷ் விடுப்பு எடுத்துவிட்டு ஐதராபாத்தில் தங்கி மாநில அரசுப் பணித் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.

அப்போது அதில் தனக்கு விருப்பமில்லை என்றும், கோழிப்பண்ணை வைக்க மீதி வரதட்சணைப் பணத்தை தரவேண்டும் என்றும் லாஸ்யாவிடம் கூறியுள்ளார்.

அழுத்தத்தின் காரணமாக, லாஸ்யாவின் குடும்பத்தினர் 20 நாட்களுக்கு முன்பு நரேசுக்கு ரூ.20 லட்சம் கொடுத்துள்ளனர்.

ஆனாலும் நரேஷ் மேலும் 10 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று கூறி லாஸ்யாவை துன்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாமியார் வீட்டை விட்டு வெளியே சென்ற போது லாஸ்யா தன்னுடைய 2 வயது மகனை தூக்கிட்டு கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவமறிந்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள்ளாக்க லாஸ்யாவும் அவரது மகனும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.