வெயில் காலம் முடியுற வரை இந்த 10 உணவுகளை சாப்பிடாதீங்க! அமைதியாய் தாக்கும் ஆபத்து…

31
Advertisement

வெயில் காலத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கும், எப்போதும் உடல் சோர்வாகவே உணர்வதற்கும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் காரணமாக இருக்கலாம்.

பெரும்பான்மை மக்கள் ஒரு கப் coffeeயுடன் தங்கள் நாளை தொடங்குவார்கள்.

Coffeeயில் உள்ள Caffeine உடலில் உள்ள நீர்த்தன்மையை குறைத்து நீரிழப்பு ஏற்பட வழி வகுக்கும் என்பதால், இதை தவிர்ப்பது நல்லது. சோடியம் நிறைந்துள்ள ஊறுகாய்களும் நீரிழப்பை ஏற்படுத்துவதோடு, அஜீரணக் கோளாறுகளுக்கும் காரணமாக அமைகிறது.

உலர்ந்த பழங்கள் உடலுக்கு ஊட்டச்சத்து தருபவையாக இருந்தாலும், அவை உடல் உஷ்ணத்தை வெகுவாக அதிகரித்து உடற்சோர்வை உண்டாக்கும். அதிக சக்கரையும் பாலும் சேர்ந்த மில்க் ஷேக் வகைகள் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடும். காரமான உணவுகளில் காணப்படும் Capsaicin என்ற உட்பொருள் உடல் வெப்பத்தை அதிகரித்து அதிகமான வியர்வை மற்றும் பிற உடல் உபாதைகளுக்கு அடிப்படையாக அமைகிறது.

வெயில் நேரங்களில் Grill செய்யப்பட்ட இறைச்சி சாப்பிடுவது உடல் வெப்பத்தை உயர்த்துவதோடு புற்றுநோய்க் காரணியாகவும் உள்ளது. சமோசா, French Fries, வடை, பஜ்ஜி போன்ற பொரித்த உணவுகள் செரிமான சிக்கல்களையும் நீரிழப்பையும் ஏற்படுத்துகின்றன.

வெயிலுக்கு இதமாக இருக்குமே என சோடா மற்றும் மது வகைகளை உட்கொண்டால் நீரிழப்பு, உடல் வெப்பம், தலைவலி ஏற்படும். உப்பு அதிகமாக சேர்த்து கொள்வது, உடலில் உள்ள நீரை வற்ற செய்து வறட்சியான தாகமான உணர்வு மற்றும் தொடர்ச்சியான உடற்சோர்வு ஏற்பட வழி வகுக்கும் என்பதால் மேற்குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்து நீர்ச்சத்து நிறைந்த பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொண்டால், கோடைக் காலத்தை சிறப்பான ஆரோக்கியத்துடன் சமாளிக்க முடியும் என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.