புலி குட்டிகளுக்கு தாயான ‘நாய்’

394
Advertisement

மனிதனாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் அன்பின் மொழி அனைவருக்கும் புரியும்.இது போன்று மனம்  கவரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில்,தாயால் கைவிடப்பட்ட மூன்று புலிகுட்டிகளுக்கு தாய் ஆக மாறியுள்ளது நாய் ஒன்று.சீனாவில் பூங்கா ஒன்றில் வளர்ந்து வரும் பெண் புலி சமீபத்தில் 3 குட்டிகளை ஈன்றது ஆனால் தன் குட்டிகளை தாய் புலி சேர்த்துக்கொள்ளவில்லை.குட்டிகளை விட்டு விலகியது.

இந்நிலையில் பூங்காவில் உள்ள நாய் ஒன்று அந்த மூன்று புலி குட்டிகளையும் தன் குழந்தைகள் போல அரவணைத்து வருகிறது.புலி குட்டிகளும் தன் தாயுடன்(நாய்) மகிழ்ச்சியாக விளையாடி மகிழ்ந்துவருகிறது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புலியின் இறப்பைத் தவிர, குட்டிகள் பலவீனமாகவோ, ஊனமாகவோ, காயமாகவோ அல்லது நோய்வாய்ப்பட்டதாகவோ இருக்கும்போது, ​​புலி தன் குட்டிகளை விட்டுச் செல்கிறது. சில புலிகள் காயம் காரணமாக அல்லது உணவளிக்க முடியாமல் தங்கள் குட்டிகளை விட்டு விடுகின்றன என ஆய்வு அறிக்கை கூறுகிறது.