மலைசிங்கத்துடன் சண்டையிட்டு உரிமையாளரை காப்பாற்றிய நாய்

264
Advertisement

நாய்கள்  மனிதனின் சிறந்த நண்பன் என்று அடிக்கடி கூறுவார்கள். இதன் உண்மைத்தன்மையைக் காட்டும் பல வீடியகள் சமுக வலைதளத்தில் உள்ளன.

இதுபோன்று ஒரு உணர்ச்சிவசப்பட வைக்கும் மற்றொரு சம்பவம் ஒன்று கலிபோர்னியாவில் நடந்துள்ளது.பெண் ஒருவர் தன் செல்லமாக வளர்த்துவரும்   ஈவா என பெயரிடப்பட்ட நாயுடன்  வடக்கு கலிபோர்னியா மலைப்பகுதியில்  நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது,

எதிர்பாராதவிதம் இடைமறித்த  மலை சிங்கம் ஒன்று பெண்ணை தாக்க முயற்சித்து உள்ளது,அவர் செல்லப்பிராணியான ஈவா,ஒரு அம்மா போல தன்னை வளர்த்துவரும் உரிமையாலாளர் காப்பாற்ற அந்த மலை சிங்கத்துடன் சண்டையிட்டு உள்ளது.

ஒருகட்டத்தில் படுகாயதுடன் அந்த மலை சிங்கத்திடமிருந்து இருவரும் தப்பிச்சென்றனர்.இந்த சம்பவம் நடைபெற்று சில நாட்களுக்கு பின் தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

அத்துடன் , “இது ஈவா. அவள் ஒரு மலை சிங்கத்திடம் இருந்து தன் உரிமையாளரை காப்பாற்றினாள்.ஈவா அதை எதிர்த்துப் போராடினாள்.அந்த சம்பவத்திற்கு பின் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாள், பூரண குணமடைந்து இன்று இரவு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் உயரிய கௌரவத்தை ஈவாவுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆபத்தில் இருக்கும் தன் உரிமையாளரை காப்பாற்ற தன் உயிரை பணயம்வைத்து காப்பாற்றிய ஈவாவின் துணிச்சலை இணையவாசிகள் பாராட்டிவருகின்றனர்.காயமடைந்து உள்ள ஈவாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.