இந்த உணவுகளை சாப்பிடுறீங்களா? அப்ப கண்டிப்பா முடி கொட்டும்..

180
Advertisement

பொடுகுத் தொல்லை, இளநரை மற்றும் தலைமுடி உதிர்வு போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய பெரிய உணவு பட்டியலே உள்ளது.

ஆனால், எதை சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வு அதிகரிக்கிறது என்பதை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சக்கரை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் மட்டும் இல்லாமல் தலைமுடி உதிர்வு மற்றும் வழுக்கை தலை பிரச்சினை தீவிரமடைகிறது. கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ள நட்ஸ் வகைகள், ஒவ்வாமை உள்ளவர்களுக்கு முடி உதிர்வு ஏற்பட காரணமாக அமைகிறது. பச்சையாக முட்டையை குடிப்பது தலைமுடி ஆரோக்கியத்துக்கு எதிர்மறை விளைவுகளை அளிக்கிறது.

கார்போனேட்டட் (Carbonated) பானங்கள் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுத்துவதோடு முடி கொட்டவும் வழி வகுக்கிறது. மது அருந்துபவர்களுக்கு முடிக்கு தேவையான கெரட்டின் புரதக் குறைபாடு ஏற்படுகிறது. டயட் சோடாக்களில் சேர்க்கப்படும் அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பு, தலைமுடியின் வேர்க்கால்களை நேரடியாக பாதிக்கிறது.

இது மட்டுமில்லாமல் துரித உணவுகளில் காணப்படும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் குறிப்பிட்ட வகை மீன்களில் அதிகமாக இருக்கும் மெத்தில்-மெர்குரியின் தலைமுடி வளர்ச்சிக்கு பாதகமாக அமைவதால், முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு காண சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.