வெள்ளரிக்காயை தோலுரிக்காம சாப்பிடுறீங்களா? உங்களுக்கு தான் இந்த பதிவு…..

203
Advertisement

தற்பொழுதுள்ள இந்த கோடை காலத்துல வெயில் நம்மள வாட்டிவதைச்சுட்டு வருது இந்நிலையில் கோடை கால வரப்ரசாதமாகிய வெள்ளரிக்காயை பற்றி தொகுப்பாக இந்த காணொலி அமையும்.

நம்முடைய உடலை குழிற்சியாக வைப்பது முதல் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது வெள்ளரிக்காய்,இதில் நீர்சத்து நிறைந்திருப்பதோடு சில அத்தியாவசிய விட்டமின்களும் நிறைந்திருக்கின்றது.

இது வெறும் 30 கலோரிகள் மற்றும் ஜீயோ கொழுப்புடன், நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை(free radicals ) எதிர்த்துப் போராடவும், வயதாவதை தாமதப்படுத்தவும் உதவுவதாக சொல்லப்படுகிறது.ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியதாவது எண்மனவென்றால் வெள்ளரிக்காயில் அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாக கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய இந்த வெள்ளரிக்காய் அதிகளவில் தேவைப்படுவதால் அந்த தேவையை பூர்த்தி செய்ய அவைகள் பெரும்பாலும் ரசாயனங்கள் தெளித்து வளர்க்கப்படுகிறது.

இவ்வாறு ரசாயனம் கலக்கப்பட்ட இந்த வெள்ளரிக்காய்களை சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

எனவே வெள்ளரிக்காயின்மீது இருக்கும் தோள்களை நீக்கிவிட்டு சாப்பிடுவது சிறப்பானதாக இறுக்கிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.