“தி.மு.க அரசு பழிவாங்கும் நடவடிக்கை, சோதனைகள் மூலம் அ.தி.மு.க முடக்க முயற்சி”-எஸ்.பி.வேலுமணி!

328
Advertisement

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பணம், நகை உள்ளிட்ட எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இரண்டாவது முறை சோதனை நடைபெற்றுள்ளதாக எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 13 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.

சோதனை முடிந்த பிறகு அதிகாரிகள் வெளியே சென்ற போது, அ.தி.மு.க தொண்டர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்த முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அதிகாரிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது வீட்டில் இரண்டாவது முறை சோதனை நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கடந்த முறையை போன்று இந்த முறையும் சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக தி.மு.க-வை எதிர்த்தவர்களில் வீடுகளில் சோதனை நடைபெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தி.மு.க அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக, சோதனைகள் மூலம் அ.தி.மு.க முடக்க முயற்சிப்பதாக கூறினார்.

இந்த சோதனைகளை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.