“கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை” – அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்

475
EPS
Advertisement

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து, அ.தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தபடி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைக்க வேண்டும் எனவும், கியாஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கவும் வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisement

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் போராட்டத்தில் பங்கேற்றார்.

அனைத்து மாவட்டங்களிலும் 60 இடங்களுக்கு குறையாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளிடம் அதிமுக தலைமை அறிவுறுத்தி இருந்தனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.