100 Days of CM Stalin

cm
Advertisement

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையடுத்து உரையாற்றிய அவர், எனது அரசாக உருவான ஆட்சி இப்போது நமது அரசாக உருவாகியுள்ளது என்று கூறினார்.

திமுக அரசின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றும் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டியுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

100 நாட்கள் ஆட்சியில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக்காப்பாற்றியதே தமது சாதனையாக கருதுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement