விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

37
Advertisement

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் குடியை ஒழிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை என்று தெரிவித்தார்.

தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு கள்ளச்சராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசு மருத்துவமனையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று, பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.