DK – வை கட்டியணைத்த ரோஹித் வைரலாகும் காட்சி

63
Advertisement

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டி – 20 போட்டியில் ரோஹித் சர்மா, அக்ஸர் படேல் ஆகியோர் சிறப்பாக விளையாடிய நிலையில், ஒரு ஃபினிஷராக மிகச் சிறப்பாக விளையாடி இந்திய ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

எனவே போட்டி முடிந்த பிறகு, ரோஹித் சர்மா கார்த்திக்கை கட்டியணைத்து பாராட்டிய  காட்சி மிகவும் வைரலாகியுள்ளது, 2007 டி- 20 உலகக் கோப்பை வென்று 15 ஆண்டுகள் நிறைந்த நிலையில், அந்த அணியில் ஆடிய வீரர்களில், தற்போது  ரோஹித் சர்மா மற்றும் கார்த்திக் ஆகியோர் மட்டுமே இந்திய அணியில் விளையாடுகிறார்கள்.

இதையடுத்து வரும் டி-20 உலகக் கோப்பையில் கார்த்திக்கை விளையாட வைக்க வேண்டாம், அவர்க்குப் பதிலாக ரிஷப் பந்தை விளையாட வைக்க வேண்டும் என்று பலர் கூறிவரும் நிலையில், கார்த்திக் ஒரு சிறந்த ஃபினிஷர் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து கார்திக் பேசுகையில் ரோஹித் ஆஸி பவுலர் என்ன செய்யப் போகிறார் என்று சொன்னார், அதனால் எனது திட்டங்களில் கவனமாக இருந்தேன், ஆனால் கணித்து விளையாடுவதுதான் முக்கியம் , வெற்றிக்கான ரன்களை அடித்தது மகிழ்ச்சியான உணர்வைக் கொடுத்தது என்றார், அதுமட்டுமில்லாமல் ரோஹித் சர்மா ஆட்டம் முடிந்த பிறகு. தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டிய வீடியோ மிகவும் வைரலாகிவுள்ளது அதில் ரோஹித் கார்த்திக்கை கட்டியணைத்து தலையில் தட்டி பாராட்டியுள்ளார். எனவே தினேஷ் கார்த்திக் குறித்த கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.