41 ஆண்டுகளில் 60 வழக்குகள் பிரிந்த தம்பியை கண்டு திக்குமுக்கு ஆடிய உச்சநீதிமன்றம் 

110
Advertisement

சின்ன விஷயங்களுக்கெல்லாம் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறும்  திருமண ஜோடிகள் !  நாடு முழுவதும் தற்போது பெருகி வரும் விவாகரத்து வழக்குகளால் நீதிமன்றங்கள் திக்குமுக்காடிப் போய் இருக்கிறது!.

அதுபோன்ற தம்பதிகளிடம்  நீதிமன்ற செல்ல காரணம் கேட்டால் , அவர்கள் சொல்லுவது ஒரு காரணமே இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தாலே போதும் எப்போதும் தம்பதிகளிக்கிடையே எந்த பிரச்சனையும் வாராது.

நீதிமன்றத்திற்கு வரும் சில வழக்குகளை பார்த்தால் சுவாரசியமாக இருக்கும்.அதுபோன்ற ஒரு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு விசாரணைக்கு வந்துள்ளளது.

Advertisement

விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் தம்பதி, கடந்த 41 ஆண்டுகளில் தங்களுக்குள் 60 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். இவர்கள் திருமணமாகி 30 ஆண்டுகள் சேந்து தான் வாழ்ந்துஉள்ளனர்.

அதன் பின் சில கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் பிரிந்த பிறகும் ஒருவருக்கொருவர்  நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தனர். இதுவரை அவர்கள் தாக்கல் செய்த வழக்கு 41 ஆண்டுகளில் 60 ஆகும்.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு  வந்தபோது, வழக்கின் விபரத்தை அறிந்து  தலைமை நீதிபதியே வியப்பில் ஆழ்ந்தார்.

வழக்கின் விபரங்களை கேட்டறிந்த நீதிபதிகள் கூறுகையில் , என்ன செய்வது, சிலருக்கு தொடர்ந்து சண்டையிட்டு கொள்வது பிடித்துள்ளது. அவர்கள் எப்போதும் நீதிமன்றங்களில் இருப்பதையே விரும்புகின்றனர். நீதிமன்ற படி ஏறவில்லை எனில் அவர்களுக்கு துாக்கம் வராது. உங்களுக்கு இடையிலான பிரச்னைகளை மத்தியஸ்தம் வாயிலாக தீர்த்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீதிமன்றத்தை நீங்கள் அணுக முடியாது. என  உத்தரவிட்டனர்.