மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உபகரணங்களை முதலமைச்சர் வழங்கினார்

245

சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தென்னிந்தியாவில் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

இந்த அருங்காட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் வகையில், செயல் விளக்க மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

21 வகையான மாற்றுத்திறனாளிகள், தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் உதவி உபகரணங்கள் ஆகியற்றை பயன்படுத்த இந்த அருங்காட்சியகம் உதவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு 9.50 கோடிரூபாய் மதிப்பீட்டில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.