Advertisement
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட குட்டத்து ஆவாரம்பட்டி ஊராட்சி மற்றும் புள்ளிராஜாப்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதிக்கு, ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்க வில்லை என தெரிகிறது.
இப்பகுதியில், தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.