தோனி விளையாடுவது சந்தேகம் தான்…சவால்களை கடந்து சாதிக்குமா CSK?

47
Advertisement

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் IPL போட்டியின் 16வது சீசன், இன்று  அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் கோலாகலமாக தொடங்க உள்ளது.

தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் விரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் போட்டியில் களம் இறங்குகிறது.

கடந்த வருடமே கோப்பையை கைவிட்ட சென்னை அணி இந்த முறை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், CSK அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனிக்கு பயிற்சி ஆட்டத்தின் போது முட்டியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் பங்குபெறுவது சந்தேகமாகி உள்ளது.

மேலும், பலவீனமான முட்டியுடன் அவரால் Wicket Keeping செய்வதும் சிரமமே. தோனிக்கு பதிலாக டெவோன் கான்வே விக்கட் கீப்பிங் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல ருட்டுராஜ் கைக்வாட் அல்லது அம்பத்தி ராயுடு opener ஆக விளையாட வாய்ப்புள்ளது.

எல்லாம் சரியாக நடக்க மாற்று ஏற்பாடுகளை செய்து, CSK அணி சிறப்பாக வியூகங்களை வகுத்து வந்தாலுமே செண்டிமெண்ட் ரீதியாக இந்த மாற்றங்கள் CSK ரசிகர்களை பாதித்துள்ளது என்றே சொல்லலாம். நான்கு முறை IPL கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை வெற்றி வாகை சூடும என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.