Cooku with Comali நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா.
தற்போது ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே தர்ஷா குப்தா நடிக்கும் 2-வது திரைப்படம் குறித்த தகவல் வந்துள்ளது.
அதன்படி, யுவன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் தர்ஷா நடிக்கிறார். காமெடி நிறைந்த திகில் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்த தகவலை தர்ஷா குப்தா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.