மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில ஆசிரியர்

350

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பள்ளியில் பணியாற்றிய வரும் கிருஷ்ணகிரியைச் ஆங்கில ஆசிரியர் முபாரக் என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், மாணவியை கடத்தி சென்ற ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.